என்னது.. சுதந்திர தின விளம்பரத்தில் பாலியல் புகாருக்குள்ளான எம்எல்ஏ குல்தீப் செங்கார் புகைப்படமா?

என்னது.. சுதந்திர தின விளம்பரத்தில் பாலியல் புகாருக்குள்ளான எம்எல்ஏ குல்தீப் செங்கார் புகைப்படமா?

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹிந்தி நாளிதழில் வெளியான சுதந்திர தின விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பாலியல் புகாருக்குள்ளான குல்தீப் செங்காரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது சர்


உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹிந்தி நாளிதழில் வெளியான சுதந்திர தின விளம்பரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பாலியல் புகாருக்குள்ளான குல்தீப் செங்காரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உன்னாவ் எம்எல்ஏ செங்கார் மீதான பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே பாலியல் புகார் அளித்த பெண் வந்த கார் விபத்தில் சிக்கியதில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து பாஜகவில் இருந்து எம்எல்ஏ செங்கார் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், உன்னாவ் பகுதிக்கு உட்பட்ட உகூ பஞ்சாயத்து நிர்வாகி பணம் செலுத்தி அளித்த இந்த விளம்பரத்தில் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் சகோதரத்துவ தினத்துக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் அந்த விளம்பரத்தில் செங்கார் மனைவியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து விளம்பரம் அளித்த அனுஜ் கூறுகையில், இந்த விளம்பரத்தில் என்ன தவறு உள்ளது. எந்த கட்சி சார்பிலும் இந்த விளம்பரம் கொடுக்கப்படவில்லை. இன்னமும் உன்னாவ் எம்எல்ஏவாகவே செங்கார் உள்ளார் என்று சொல்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com