அருண் ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடம்?

அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண் ஜேட்லி உடல்நிலை கவலைக்கிடம்?

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இதயத்துடிப்பு சீராக இல்லாததாலும், சுவாசப் பிரச்னை காரணமாகவும் மருத்துவமனையில் ஜேட்லி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்துக்கான சிறப்பு மருத்துவர், இதயநோய் நிபுணர் உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சர்க்கரை நோய் காரணமாக, கடந்த 2014-ஆம் ஆண்டு எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை அவர் செய்து கொண்டார். அதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை நேரில் வந்து ஜேட்லி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வந்தனர்.

 முன்னதாக, அருண் ஜேட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com