காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி நெடுகிலும் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டதுடன், சிறிய பீரங்கி மூலமும் குண்டுகளை வீசினர்.
இந்தத் தாக்குதலில், நௌஷேரா பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். அவரது பெயர், சந்தீப் தாபா ஆகும். அவர், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனைச் சேர்ந்தவர் ஆவார். 
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் கடுமையான பதிலடியை கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் தரப்பில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. முன்னதாக, பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் கடந்த மாதம் அத்துமீறி  நடத்திய தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரும், 10 நாள் கைக்குழந்தையும் உயிரிழந்தனர்.
அண்மையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதை இந்தியா மறுத்தது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com