பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை "பேசிக்' நாடுகள் பின்பற்ற வேண்டும்

"பேசிக்' கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

"பேசிக்' கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் "பேசிக்' கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களின் மாநாடு, பிரேசிலில் உள்ள சா பவுலோ நகரில் நடைபெற்றது. இதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாக, மத்திய வனம், சுற்றுச் சூழல் அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்து புவியின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பூர்த்தி செய்கின்றன. மேலும், இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.
எனவே, நான்கு நாடுகளும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்தால், பருவநிலை மாற்றத்தால் வரும் பிரச்னைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும். மேலும், இந்த விவகாரத்தில் நான்கு நாடுகளும் ஒரே குரலில் ஒற்றுமையுடன் பேச வேண்டும். ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, சிலியில் நடைபெறவுள்ளது. அதில், உலக நாடுகள் பின்பற்றும் அளவுக்கு "பேசிக்' கூட்டமைப்பு நாடுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று ஜாவடேகர் பேசியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com