சாலையோர டீக்கடைக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்!

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ஜெய்ப்பூரில் சாலையோரத்தில் உள்ள கடையில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 
சாலையோர டீக்கடைக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள்!

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ஜெய்ப்பூரில் சாலையோரத்தில் உள்ள கடையில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, ஜெய்ப்பூரில் சவுரா ரஸ்தா என்ற இடத்தில் உள்ள 'சாஹோ டீ ஸ்டால்' என்ற சாலையோரக் கடையில் முதல்வர் அசோக் கெலாட் தேநீர் அருந்த திடீர் விசிட் அடித்துள்ளார். அவருடன், துணை முதல்வர் சச்சின் பைலட், அரசு தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி, துணைத் தலைமைக் கொறடா மகேந்திர சவுத்ரி, சுகாதாரத்துறை அமைச்சர் சுபாஷ் கார்க் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திடீரென வந்ததால் கடைக்காரர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்து டீ வழங்கியுள்ளார். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் மண்குவளையில் டீ குடித்துள்ளனர். அமைச்சரவையில் அனைவரும் எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதாலும், மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும் என்பதாலும் அவர்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.

முதல்வர் வந்துள்ளார் எனத் தெரிந்ததும் அருகில் உள்ள மக்கள் கடைக்கு முன்பாக கூடியுள்ளனர். வெளியே வந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மக்களுடனும் பேசியுள்ளனர். 

மேலும், தேநீர்க்கடை சந்திப்பில் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தானுக்கு எம்மாதிரியான உதவிகளை செய்தார் என்பது குறித்து முதல்வர், மற்ற அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தார். 

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் சச்சின் பைலட், ராஜிவ் காந்தி எவ்வாறு எம்.எல்.ஏக்கள் கூறுவதை காதுகொடுத்து கேட்பாரோ, அதுபோன்று தற்போதைய முதல்வரும் செய்லபட வேண்டும் என்று சிரித்துக்கொண்டே கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையே மறைமுக கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com