சிதம்பரம் எங்கே சென்றார்? 

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே ப.சிதம்பரத்திற்கு மொபைல் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த அவர், தனது டிரைவர் மற்றும் கிளெர்க்கை வழியிலே இறக்கிவிட்டு காரை ஒட்டி
சிதம்பரம் எங்கே சென்றார்? 

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற, அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்நிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும்தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. 

இந்த நிலையில் தான், இவ்வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா  இன்று மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வும் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை வேறு ஒரு நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளது. 

சிதம்பரம் எங்கே சென்றார்? 

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே, அடுத்த 2 மணி நேரத்திற்குள் சிதம்பரம் சிபிஐ துணை கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் வந்தபோதில் இருந்தே சிதம்பரம் தனது வீட்டில் இல்லை. தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் வீடு மற்றும் அவர் செல்லும் இடங்களில் சென்று அவரைத் தேடி வருகின்றனர். 

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே ப.சிதம்பரத்திற்கு மொபைல் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த அவர், தனது டிரைவர் மற்றும் கிளெர்க்கை வழியிலே இறக்கிவிட்டு காரை ஒட்டிச் சென்றுள்ளார். டிரைவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்ததில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும், தீர்ப்பு வந்த உடனேயே சிதம்பரம் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் அவர் இருக்கும் இடத்தை ஐடி துறையாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் தனது வழக்கறிஞர்களுடன் சென்று திரும்பியுள்ளார். அதன்பின்னரும், அதிகாரிகள் அவரது வீட்டில் சென்று பார்த்தபோது சிதம்பரம் அங்கு இல்லை. இதனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் அதிகாரிகளுக்கே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், 'சிதம்பரம் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றம் கூறியுள்ள படி, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com