Enable Javscript for better performance
காஷ்மீரில் தொடர்ந்து பகலில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காஷ்மீரில் தொடர்ந்து பகலில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்வு

    By DIN  |   Published On : 22nd August 2019 01:22 AM  |   Last Updated : 22nd August 2019 01:22 AM  |  அ+அ அ-  |  


    காஷ்மீரில்  புதன்கிழமையும் பகல் நேரத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டிருந்தன.
    இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
    காஷ்மீரின் பரவலான பகுதிகளில் பகல் நேரத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் புதன்கிழமையும் தளர்த்தப்பட்டிருந்தன. இதில் ஸ்ரீநகரின் சில பகுதிகளும் அடங்கும். இதையொட்டி ஸ்ரீநகரில் சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த  தடுப்பு அரண்கள் உள்ளிட்டவற்றை போக்குவரத்துக்கு ஏதுவாக காவல்துறையினர் அகற்றினர். அதேநேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடுநிலைப்பள்ளி வரையிலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் போதிய எண்ணிக்கையில் வரவில்லை. அலுவலர்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனர். இதனால் பள்ளிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
    ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீநகர் விமான நிலையம் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன. 93,000 தரைவழி தொலைபேசி இணைப்புகளில், 73,000-க்கு மீண்டும்  இணைப்பு கொடுக்கப்பட்டது. எஞ்சிய இணைப்புகளும் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது மேம்பட்டுள்ளது. இருப்பினும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் செயல்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
    செல்லிடப்பேசி, இணையச் சேவை ஆகியவை தொடர்ந்து 17ஆவது நாளாக துண்டிக்கப்பட்டிருந்தது என்று அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
    கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரிதான்-பாஜக: இதனிடையே, ஜம்முவில் பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் பிரிவு செய்தித் தொடர்பாளர் அஸ்வனி குமார் சுருங்கூ செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான் என்றார். அவர் மேலும் கூறுகையில், நகர்ப்புற நக்ஸலைட்டுகள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சில சக்திகள், மாநிலத்தில் மக்களைத் தூண்டிவிட்டு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன; குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத் தூண்டிவிட முயற்சித்தன. அவர்களின் சதியை முறியடிக்கவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது சரியான நடவடிக்கைதான் என்றார்.
    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 5ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 
    இதையொட்டி, அங்கு போராட்டங்கள் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தில் கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்களை மத்திய அரசு குவித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுடன், செல்லிடப்பேசி, தரைவழித் தொலைபேசி, இணையச் சேவை ஆகியவற்றை முடக்கியது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp