இந்தியா-ஜாம்பியா இடையே : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவுக்கும் இடையே புதன்கிழமை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-அதிபர் எட்கர் முன்னிலையில் இந்தியா-ஜாம்பியா இடையே ஒப்பந்தம் மேற்கொண்ட இருநாட்டு அதிகாரிகள். 
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-அதிபர் எட்கர் முன்னிலையில் இந்தியா-ஜாம்பியா இடையே ஒப்பந்தம் மேற்கொண்ட இருநாட்டு அதிகாரிகள். 


இந்தியாவுக்கும், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவுக்கும் இடையே புதன்கிழமை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பிரதமர் நரேந்திர மோடி-ஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா லுங்கு ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்புத் துறை, கனிம வளங்கள் உள்பட 6 துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 
மூன்று நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இந்தியா வந்த ஜாம்பியா அதிபர் எட்கர் சாக்வா, பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-ஜாம்பியா இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். 
இதையடுத்து இந்தியா-ஜாம்பியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புவியியல் மற்றும் கனிம வளங்கள், பாதுகாப்புத் துறை, கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அத்துடன், இந்திய வெளியுறவுச் சேவைகள் பயிற்சி நிறுவனத்துக்கும், ஜாம்பியாவின் தூதரகப் பயிற்சி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
மேலும், மின்னணு வழிக் கல்வி தொடர்பாக ஒரு ஒப்பந்தம், இந்திய தேர்தல் ஆணையம்-ஜாம்பியாவின் தேர்தல் ஆணையம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 

பின்னர் பிரதமர் மோடி-அதிபர் எட்கர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: 
வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை வழங்குவதில் நம்பகமான கூட்டாளி என்ற முறையில் இந்தியா தனது வளர்ச்சியின் அனுபவங்களை ஜாம்பியாவுடன் பகிர்ந்துகொள்கிறது. சுகாதாரம், மின்சார உற்பத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் ஆகியவை தொடர்பாக இந்தியாவின் ஒத்துழைப்புடன் ஜாம்பியாவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 
சுகாதாரம், சுற்றுலா, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், ஜாம்பியாவும் தங்களது பங்களிப்பை அதிகரிக்கும். சூரிய சக்தியில் இயங்கக் கூடிய 100 நீர்ப்பாசனக் குழாய்கள், 1000 கிலோ அரிசி, 100 டன் பால் பவுடர் ஆகியவற்றை ஜாம்பியாவுக்கு இந்தியா வழங்கவுள்ளது. கனிம வளங்கள் அதிகம் உள்ள ஜாம்பியாவில் இருந்து, அதிக அளவில் தாமிரத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com