ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி தில்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி தில்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

காஷ்மீர் பிரச்னையின் காரணமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தில்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 கட்சிகள் பங்கேற்கும் எனவும் அவர் கூறினார். அதன்படி இன்று தில்லி ஜந்தர் மந்தரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், டி.ராஜா, சீதாராம்யெச்சூரி, பிருந்தா காரத், கேஎஸ்.அழகிரி, கார்த்தி சிதம்பரம், சமாஜவாதி தலைவர் ராம் கோபால் யாதவ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com