நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் செப்.19 வரை நீட்டிப்பு

இந்திய அரசால் பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை செப்.19 வரை நீட்டித்து பிரிட்டன் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் செப்.19 வரை நீட்டிப்பு


இந்திய அரசால் பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை செப்.19 வரை நீட்டித்து பிரிட்டன் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டனின் வாண்ட்ஸ்வர்த் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் உள்ள அவரிடம் வழக்கமான காணொலி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது சிறையில் இருந்த நீரவ் மோடியிடம் நீதிபதி டான் இக்ரம் கூறியது: நாடு கடத்தும் மனு மீதான விசாரணை தேதிகள் தற்போது முடிவாகவில்லை. விசாரணைக் கைதியுடனான வழக்கமான அடுத்த காணொலி விசாரணை செப்.19 தேதி நடைபெறும். அப்போது நாடு கடத்தும் வழக்கு விசாரணை தேதிகள் அறிவிக்கப்படும். அதுவரை நீதிமன்றக் காவல் நீடிக்கும் என்றார்.
நீரவ் மோடியை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனுவின் விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. ஐந்து நாள்களில் வழக்கு விசாரணை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பான அட்டவணை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவாக வாய்ப்புள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நீரவ் மோடி கைதான பிறகு அவர் தாக்கல் செய்த 5 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் பெற்ற பிறகு, சாட்சியங்களைக் கலைக்கவும் அவர் தப்பியோடித் தலைமறைவாகிவிடவும் வாய்ப்புள்ளது என்று அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இங்ரிட் சிம்லர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com