Enable Javscript for better performance
இடுப்பு மூட்டு பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    இடுப்பு மூட்டு பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு

    By DIN  |   Published on : 24th August 2019 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    johnson


    உத்தரபிரதேசத்தில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டுகளால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு தலா ரூ.25 லட்சத்தை அந்நிறுவனம் இழப்பீடாக வழங்கியுள்ளது.
    இதுகுறித்து அம்மாநிலத்தின் மருந்து உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியான ஏ.கே.ஜெயின் கூறியுள்ளதாவது:
    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் வகை செயற்கை மூட்டுகளை பயன்படுத்தி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூன்று பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த நிறுவனம் தயாரித்து அளித்த செயற்கை மூட்டுகளில் பிரச்னை இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் மீண்டும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.25 லட்சத்தை அந்த நிறுவனம் இழப்பீடாக வழங்கியுள்ளது. மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையை பொருத்தமட்டில் இதுவரையில் இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் வகை செயற்கை மூட்டுகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்ட 67 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது, தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் கடந்த மே மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai