Enable Javscript for better performance
திருமலை: ரூ.5.15 கோடி சில்லறை நாணயங்கள் வங்கியில் டெபாசிட்- Dinamani

சுடச்சுட

    

    திருமலை: ரூ.5.15 கோடி சில்லறை நாணயங்கள் வங்கியில் டெபாசிட்

    By DIN  |   Published on : 24th August 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tirumala


    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்கள் ரூ.5.15 கோடியை பல வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.
    திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் சில்லறை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என பிரித்து ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கியில் டெபாசிட் செய்து வருகிறது. சில்லறை நாணயங்கள் மட்டும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகக் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
    சில்லறை நாணயங்களை வங்கி ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்ததால் அவை பல ஆண்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அவை ரூ.20 கோடியை எட்டியுள்ளது. 
    இதுகுறித்து அறிந்த தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி சில்லறை நாணயங்களை ஏற்கும் வங்கிகளில் அதே அளவில் பணம் வரவு வைக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து வங்கிகள் சில்லறை நாணயங்களை ஏற்றுக் கொள்ள முன்வந்தன. 
    அதன்படி வியாழக்கிழமை ரூ.5.15 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சில்லறை நாணயங்களும் விரைவில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai