காஷ்மீரில் அமைதி நிலவுகிறது: அதிகாரிகள் தகவல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை சில இடங்களில் மட்டும் போராட்டம் நடைபெற்றது என்றும் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான சூழல் காணப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியையொட்டி,  ஜம்முவில் உள்ள ரகுநாதர் கோயிலில்  வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துப்பாக்கிய ஏந்திய போலீஸார்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, 300 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முன்வருமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது முதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com