போலீசாரை மிரட்டிய பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு! 

பத்திரிக்கையாளர்கள் என்ற அடையாளத்தை பயன்படுத்தி போலீசாருக்கு தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, குற்றவாளிகளை காப்பாற்றும் செயலில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
போலீசாரை மிரட்டிய பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு! 

பத்திரிக்கையாளர்கள் என்ற அடையாளத்தை பயன்படுத்தி போலீசாருக்கு தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, குற்றவாளிகளை காப்பாற்றும் செயலில் ஈடுபட்ட 5 பேர் மீதுகுண்டர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பத்திரிகைத்துறையை பயன்படுத்தி காவல்துறைக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை தங்களது வேலைகளுக்காக பயன்படுத்தினர். 

மேலும், காவல்துறை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பலரை விடுவிக்க வேண்டும் என்றும் போலீசாரை வற்புத்தியுள்ளனர். இதையடுத்து மாவட்ட காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு, ஐந்து பேரில் ஷில் பண்டிட், உதித் கோயல், சந்தன் ராய், நிதேஷ் பாண்டே ஆகிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய ராமன் தாகூரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராமன் தாகூர் குறித்து தகவல் தெரிவித்தால் 25,000 வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நால்வரும் தற்போது 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதன்பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் அல்ல என்று தெரிய வந்துள்ளது.

அதிகாரிகளின் பெயரை கெடுக்கும் விதமாக பத்திரிகையில் விமர்சனம் செய்வோம் என்றும் நொய்டா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பிற பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இடமாற்றம் செய்வதில் சாதி சார்பு உள்ளது என்றும் அவர்கள் போலீசாரை மிரட்டியுள்ளனர். 

மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட அதிகாரிகள் குறித்து செய்தி இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பரப்பிவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், விசாரணை செய்த பின்னரே அவர்கள் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் இல்லை என்று தெரிய வந்ததாக மூத்த போலீஸ் சூப்பிரண்டு வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com