திஹார் சிறையில் அதிர்ச்சி! கைதியின் வயிற்றில் இருந்து செல்போன் கண்டுபிடிப்பு!

திஹார் சிறையில் கைதி ஒருவரின் வயிற்றில் சிறிய மொபைல் போன் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திஹார் சிறையில் அதிர்ச்சி! கைதியின் வயிற்றில் இருந்து செல்போன் கண்டுபிடிப்பு!


திஹார் சிறைச்சாலையில் கைதி ஒருவரின் வயிற்றில் சிறிய மொபைல் போன் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிறைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியின் மேற்குப் பகுதியில் உள்ள திஹார் சிறை தெற்கு ஆசியாவிலே மிகப்பெரிய சிறை ஆகும். அதிகமான கைதிகளைக் கொண்ட இந்த சிறையில், பாதுகாப்பும் பலமாகவே இருக்கும். இந்த நிலையில், திஹார் சிறையில் எண் 4ல் உள்ள கைதிகளில் ஒருவர், சிறிய மொபைல் போன் ஒன்றை விழுங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவர்கள் வந்து சோதனை செய்ததில், அவரது வயிற்றில் சிறிய மொபைல் போன் இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள் அவரை வாந்தி எடுக்க வைத்து மொபைலை வெளியே எடுத்தனர். 

இதைவிட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும் இங்கே அரங்கேறியுள்ளது. இதேபோன்று மற்றொரு கைதி ஒருவர், நான்கு மைக்ரோ செல்போன்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு விழுங்கியுள்ளார். பின்னர், மூன்று முறை அவரை வாந்தி எடுக்க வைத்து மருத்துவர்கள் செல்போனை வெளியே எடுத்தனர். 

இதைத்தொடர்ந்து, மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை மூலம் சோதித்ததில், அவரது மலக்குடலில் ஒரு செல்போன் சிக்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மூலமாக அந்த செல்போன் அகற்றப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி, சிறைச்சாலையில் கைதிகள் தியானம் செய்யும் அறையில் மிகவும் அதிநவீன செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் வி.ஐ.பி கைதிகள் இருப்பதால் செல்போன்களை உள்ளே கொண்டுவர சிலர் முயற்சி செய்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், சிறைக்குள் தகவல்தொடர்பு சாதனங்கள் இதுபோன்று மறைமுகமாக கடத்தப்படுவதாகவும், இதனைத் தடுக்க சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் டெல்லி சிறைச்சாலைகளின் புதிய இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com