எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் தனிச் சாதனை படைத்த காஷ்மீர் மாணவி!

எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வில் காஷ்மீர் மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் தனிச் சாதனை படைத்த காஷ்மீர் மாணவி!

எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வில் காஷ்மீர் மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 'குர்ஜார்' அல்லது 'குஜ்ஜார்' என்று அழைக்கப்படும்  பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வகுப்பைச் சேர்ந்த இர்மிம் ஷமிம் என்ற மாணவி காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இதன்மூலம், எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிலும் குர்ஜார் வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். 

ஷமிம், ரஜோரி மாவட்டத்தில் தானோர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது கிராமத்திற்கு 5 கி.மீ தொலைவில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்றார். படிப்பதற்காக தினமும் 10 கி.மீ தூரம் அவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் அதையும் அவர் சமாளித்து பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத்தேர்விலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, 'எல்லோரது வாழ்க்கையிலும் பிரச்னை என்பது இருக்கும். ஆனால், அந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டால் வெற்றி என்பது நம்மைத் தேடி வரும்' என்று கூறினார். . 

'ஷமிம் சிறந்த மருத்துவராக உருவாவதோடு, அவர் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். காஷ்மீரில் உள்ள மற்ற பெண்களுக்கு ஷமிம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார். மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் காஷ்மீர் பெண்கள் தங்களது திறமையை கொண்டுவர வேண்டும்' என்று அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com