தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக 'ஆன்லைன் போர்ட்டல்': மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக 'ஆன்லைன் போர்ட்டல்' ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக 'ஆன்லைன் போர்ட்டல்': மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புது தில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக 'ஆன்லைன் போர்ட்டல்' ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பிராவசி லீகல் செல் அமைப்பின் சார்பாக  வழக்கறிஞர் ஜோஸ் ஆபிரஹாம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது மக்களுக்கு ஓர் வலிமையான ஆயுதம். கேள்விகள் எழுப்பும் மக்களுக்கு அரசு சரியான நேரத்தில் தகவல் அளிப்பதே, இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம் ஆகும்.

அதிலும் குறிப்பாக  ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 7(1) மிகவும் வலிமையானதாகும். ஏனெனில் ஒருவரின் வாழ்க்கை, சுதந்திரம் குறித்து கவலை கொண்டு கேள்வி எழுப்பும்போது அதுகுறித்து 48 மணிநேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.  ஆனால், இப்போதுள்ள செயல்முறையில் அது நடைமுறையில் இல்லை இதனால் மக்களின் வாழ்க்கையும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்டிஐ மூலம் ஆன்லைனில் மனுத்தாக்கல் செய்து எந்த துறையின் தகவலையும் பெறும் வகையில் அதற்கென ஆன்-லைன் போர்டல் ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும். ஆன்-லைன் மூலம் மனுத்தாக்கல் செய்யவும், கட்டணம் செலுத்தும் வசதியும் உருவாக்கித்தர உத்தரவிட வேண்டும்.

இந்தியாவில் தற்போது தில்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டும் ஆன்-லைனில் ஆர்டிஐ மனுத்தாக்கல் செய்யும் வசதி இருக்கிறது. இதை நாடுமுழுவதும் விரிவுபடுத்த வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவானது மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் பதில் அளிக்கக் கோரி  நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com