ஐஎன்எக்ஸ் அனுமதி மூலம் சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கு வாபஸ்: காரசார வாதம்!

சிதம்பரத்தின் பெயரில் இருக்கும் ஒரே ஒரு சொத்தைக் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் அனுமதி மூலம் சிதம்பரம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கு வாபஸ்: காரசார வாதம்!


புது தில்லி: சிதம்பரத்தின் பெயரில் இருக்கும் ஒரே ஒரு சொத்தைக் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்துள்ளார்.

அமலாக்கத் துறைக்கு எதிராக முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்புக்கும் இடையே காரசார வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்ததன் மூலம் சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக வாதத்தை முன் வைத்தது.

இதற்கு பதிலடி கொடுத்த மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு பெற அனுமதி அளித்ததன் மூலம் நாங்கள் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை, சிதம்பரத்தின் ஆவணங்கள் எதையும் நாங்கள் கசியவிடவில்லை என்று கூறினார்.

மேலும், சிதம்பரத்துக்கு கணக்கு உள்ளது என்று அமலாக்கத் துறை சொல்ல அதற்கு, கபில் சிபல் ஆமாம் டிவிட்டரில் சிதம்பரத்துக்கு கணக்கு உள்ளது என்று கூறினார்.

வங்கிக் கணக்குக்கும் டிவிட்டர் கணக்குக்கும் என்ன சம்பந்தம் என்று அமலாக்கத் துறை கேட்க, சிபிஐதான் டிவிட்டர் கணக்கு இருக்கிறதா என்று கேள்வி கேட்டது என்று சிதம்பரத்தின் வழக்குரைஞர் கபில் சிபல் கூறினார்.

சிதம்பரத்தின் பெயரில் இருக்கும் ஒரே ஒரு சொத்தைக் காட்டட்டும் நான் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று சிதம்பரம் தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடப்பது நீதிமன்ற விசாரணை அல்ல ஊடக விசாரணை என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com