ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத் திருடுவதால் பலனில்லை: ராகுல் காந்தி

பொருளாதாரச் சீரழிவில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் குழப்பத்தில் இருப்பதாகவும்,  இதற்காக அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுவதாகவும் காங்கிரஸ்
ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத் திருடுவதால் பலனில்லை: ராகுல் காந்தி


பொருளாதாரச் சீரழிவில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் குழப்பத்தில் இருப்பதாகவும்,  இதற்காக அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுளார்.

தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டுவதற்காக தனது இருப்பில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை முடிவு செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரச் சீரழிவை உருவாக்கியதே பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்தான். தற்போது அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதியைத் திருடுவது பலனளிக்காது. இந்த நடவடிக்கை, துப்பாக்கித் தோட்டாவால் ஒருவருக்கு ஏற்பட்ட படுகாயத்துக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, மருத்துவமனையில் இருந்து பேண்ட்-எய்ட் பிளாஸ்திரியைத் திருடி காயத்தின் மீது ஒட்டுவது போன்றதாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:  ரிசர்வ் வங்கியின் அவசரகால இருப்பு என்பது மிகவும் மோசமான நிதி நெருக்கடி நேரங்களிலும், போர் போன்ற சூழல்களிலும்தான் மத்திய அரசால் பயன்படுத்தப்படும். ஆனால் அந்த உபரி நிதியை பாஜக தற்போது தன்னால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை சரிசெய்வதற்குப் பயன்படுத்துகிறது. அக்கட்சி தலைமையிலான அரசு, ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை சீரழித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான சஞ்சய் வெளியிட்ட பதிவில், ரிசர்வ் வங்கி தற்போது கொள்ளையடிக்கப்பட்ட வங்கியாக மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com