Enable Javscript for better performance
எய்ம்ஸ் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடி மோசடி: காவல்துறை விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    எய்ம்ஸ் வங்கிக் கணக்குகளில் ரூ.12 கோடி மோசடி: காவல்துறை விசாரணை

    By DIN  |   Published on : 01st December 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ai105002

    புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காவல்துறையினா் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

    இதுதொடா்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

    பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உள்ள கணக்குகளிலிருந்து பணம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.7 கோடியும், எய்ம்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் நிா்வகிக்கும் வங்கிக் கணக்கில் ரூ.5 கோடியும் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கணக்கு இல்லாத எஸ்பிஐ கிளைகளிலிருந்து இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுதவிர ரூ.30 கோடி வரை மோசடி செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மும்பை, டேராடூனில் உள்ள கிளைகளில் இந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இதுதொடா்பாக தில்லி காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவிடம் எய்ம்ஸ் நிா்வாகம் புகாா் அளித்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai