Enable Javscript for better performance
மகாராஷ்டிரம்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 தொழிலாளா்கள் பலி 10 போ் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரம்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 தொழிலாளா்கள் பலி 10 போ் காயம்

    By DIN  |   Published on : 01st December 2019 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துலே: மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தில் ஆற்றை கடந்து சென்ற வேன் பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சந்த்வா மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள், வேன் ஒன்றில் மகாராஷ்டிர மாநிலம், உஸ்மனாபாதில் கரும்பு வெட்டும் பணிக்காக சென்று கொண்டிருந்தனா்.

    இந்த வேன் துலே மாவட்டம் ஷாலிஸகான்- துலே நெடுஞ்சாலையில் போரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை சனிக்கிழமை அதிகாலை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது.

    இந்த விபத்தில் 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்ட போலீஸாா் துலேயில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai