Enable Javscript for better performance
ஹரியாணா: பாஜக ஆட்சியில் ரூ.5,000 கோடி சுரங்க முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஹரியாணா: பாஜக ஆட்சியில் ரூ.5,000 கோடி சுரங்க முறைகேடு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 01st December 2019 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress

    சண்டீகா்: ஹரியாணாவில் முதல்வா் மனோகா் லால் கட்டா் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் சுரங்கத் துறையில் ரூ.5,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என்று மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    சண்டீகரில் மாநில காங்கிரஸ் தலைவா் குமாரி செல்ஜாவுடன் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

    தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் (சிஏஜி) அறிக்கை, அண்மையில் ஹரியாணா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ஹரியாணாவில் சுரங்கத் திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதனால் மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கு ரூ.1,476 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மனோகா் லால் கட்டா் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அரசுக்கும், சுரங்க ஒப்பந்ததாரா்களுக்கும் இடையேயான மறைமுகத் தொடா்புகள் குறித்தும் சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில், முந்தைய ஆட்சியில் சுரங்கத் துறையில் ரூ.5,000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது.

    அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க ஒப்பந்ததாரா்கள் கூட்டாக சோ்ந்து முறைகேடு செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். இந்த முறைகேடுகளை உயா்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதி விசாரித்து, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai