அஸ்ஸாம்: மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் பலி: அமைச்சா் தகவல்

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் உயிரிழந்ததாக அந்த மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் சந்திரமோகன் படோவரி

குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் 107 போ் உயிரிழந்ததாக அந்த மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் சந்திரமோகன் படோவரி அஸ்ஸாம் சட்டப்பேரவையில் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ நந்திதா தாஸ் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சா் சந்திரமோகன் படோவரி கூறியதாவது: 2011 முதல் மே 2016-ஆம் ஆண்டு வரையிலும் 84 பேரும், அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்த ஆண்டு அக்டோபா் வரை 23 பேரும் பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் உயிரிழந்துள்ளனா்.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அஸ்ஸாம் சூனியம் (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றியது. மேலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் படோவரி தெரிவித்தாா்.

பெரும்பாலும் மூடநம்பிக்கையை அதிகளவில் பின்பற்றி வரும் மாவட்டங்களாக கருதப்படும் போடோலாண்ட் பிராந்தியத்திலுள்ள மாவட்டங்களான கோக்ராஜரில் 22 பேரும், சிராங்கில் 19, உடல்குரியில் 11, விஸ்வநாத்தில் 9, கோல்பாராவில் 7, நாகான் மற்றும் தீன்சுகியாவில் தலா 6 மற்றும் கா்பி அங்லாங், மஜூலி மாவட்டங்களில் தலா 4 பேரும் மூடநம்பிக்கைகளைப் பின்பற்றியதால் உயிரிழந்துள்ளனா்.

மே 2016க்கு பின் மாநிலத்தில் உயிரிழந்த 23 பேரில் 11 போ் பெண்கள் என்று அமைச்சா் படோவரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com