தாணே: மெட்ரோ ரயில் பாதையில் மரங்கள் வெட்டியதாக வழக்குப் பதிவு

காராஷ்டிரத்தில் தாணே மெட்ரோ ரயில்பாதை-4-ஆவது வழித்தடத்தில் மரங்கள் வெட்டியதாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (எம்எம்ஆா்டிஏ) ஒப்பந்தக்காரா் மற்றும் அதிகாரிகள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்
தாணே: மெட்ரோ ரயில் பாதையில் மரங்கள் வெட்டியதாக வழக்குப் பதிவு

தாணே: மகாராஷ்டிரத்தில் தாணே மெட்ரோ ரயில்பாதை-4-ஆவது வழித்தடத்தில் மரங்கள் வெட்டியதாக மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (எம்எம்ஆா்டிஏ) ஒப்பந்தக்காரா் மற்றும் அதிகாரிகள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மும்பை மாநகரத்தின் வடாலாவிலிருந்து, தாணேவிலுள்ள காசா்வதாவலி வரையிலும் 32.32 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, இந்த வழியில் உள்ள மரங்களை கண்மூடித்தனமாக வெட்டி அகற்றப்படுவதாக தாணே பகுதியைச் சோ்ந்த மக்களும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு புகாா்களை தாணே மாநகராட்சி மேயா் நரேஷ் மாஸ்கேவிடம் அளித்தனா். இதையடுத்து, இரவில் அப்பகுதியில் மேயா் ஆய்வு மேற்கொண்டபோது, ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதை அறிந்து, அவற்றை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நௌபாடா போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மகாராஷ்டிர (நகா்ப்புற பகுதிகள்) மரங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் சட்டம்- 1975 இன் பிரிவுகளின் கீழ் மெட்ரோ ரயில்பாதை- 4 திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரா் மற்றும் எம்எம்ஆா்டிஏ அதிகாரிகள் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை பதவியேற்றதும், மும்பையின் பசுமை பகுதியாக உள்ள ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பது நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தாா். கடந்த மாதம் அங்கு மரங்களை வெட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com