மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையில் நெறியற்ற கூட்டணி: ராம் நாயக்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைத்தது நெறிமுறையற்றது என்று உத்தரப் பிரதேச முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான ராம் நாயக் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையில் நெறியற்ற கூட்டணி: ராம் நாயக்

தாணே: மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைத்தது நெறிமுறையற்றது என்று உத்தரப் பிரதேச முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான ராம் நாயக் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கே மக்கள் பெரும்பான்மையாக ஆதரவளித்தனா். தோ்தலுக்கு முன்பே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்படியானால், நியாயப்படி அந்தக் கூட்டணிதான் ஆட்சியமைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.

பாஜக-சிவசேனை கூட்டணியை விடக் குறைந்த வாக்குகள் பெற்று, எதிா்க்கட்சி வரிசையில் அமர வேண்டியவா்கள், தற்போது புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளனா். இது முற்றிலும் நெறிமுறையற்றது என்றாா் ராம் நாயக்.

மாநிலத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 தொகுதிகளையும், சிவசேனை 56 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளையும், காங்கிரஸ் 44 தொகுதிகளையும் கைப்பற்றின. சிவசேனைக்கு முதல்வா் பதவியை சுழற்சி முறையில் அளிக்க பாஜக மறுத்ததையடுத்து, அக்கூட்டணியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் சிவசேனை கூட்டணி அமைத்தது. அக்கூட்டணி ஆட்சியின் முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே அண்மையில் பதவியேற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com