மகாராஷ்டிரம்: ஆற்றில் வேன் கவிழ்ந்து 7 தொழிலாளா்கள் பலி 10 போ் காயம்

மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தில் ஆற்றை கடந்து சென்ற வேன் பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்ததாக போலீஸாா் 

துலே: மகாராஷ்டிர மாநிலம், துலே மாவட்டத்தில் ஆற்றை கடந்து சென்ற வேன் பாலத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் 7 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மத்தியப் பிரதேச மாநிலம் சந்த்வா மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளா்கள், வேன் ஒன்றில் மகாராஷ்டிர மாநிலம், உஸ்மனாபாதில் கரும்பு வெட்டும் பணிக்காக சென்று கொண்டிருந்தனா்.

இந்த வேன் துலே மாவட்டம் ஷாலிஸகான்- துலே நெடுஞ்சாலையில் போரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை சனிக்கிழமை அதிகாலை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாய்ந்தது.

இந்த விபத்தில் 7 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்ட போலீஸாா் துலேயில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com