'குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்' - நாடாளுமன்றத்தில் ஜெயா பச்சன் ஆவேசம்!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகளை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும், பாலிவுட் நடிகையுமான ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
'குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்' - நாடாளுமன்றத்தில் ஜெயா பச்சன் ஆவேசம்!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலைக் குற்றவாளிகளை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும், பாலிவுட் நடிகையுமான ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஹைதராபாத் பெண் மருத்துவரின் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். 

இதுகுறித்து பேசிய சமாஜ்வாதி கட்சியின் எம்.பியும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், 'ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும். இதற்கு முன்னதாக நிர்பயா வழக்கு, கத்துவா சிறுமி வழக்கு என பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் எந்த அளவுக்கு தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஹைதராபாத் கொலையில் குற்றவாளிகள் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்' என்று பேசினார். 

மேலும், 'நீங்கள் பாதுகாப்பை வழங்க முடியாவிட்டால், அவர்களை பொதுமக்களிடம் விட்டு விடுங்கள். பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கத் தவறியவர்கள் மற்றும் குற்றம் செய்தவர்கள் பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் நிறுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்' என்று கூறினார். 

அதேபோன்று அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த், 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com