Enable Javscript for better performance
Priyanka Reddy need your attention |பிரதமர் மோடி அவர்களே, பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவன- Dinamani

சுடச்சுட

  

  அந்த 4 பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்! பிரதமர் மோடி அவர்களே, பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை! ட்விட்டரில் ஹர்பஜன் சிங் கோரிக்கை!

  By DIN  |   Published on : 02nd December 2019 12:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rape

   

  தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த பயத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளது. 

  26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் உடலைக் கண்டறிந்துள்ளனர். ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

  சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்து, லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லாரியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேறியுள்ளனர்.  இதன் பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும்  முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

  பெண் மருத்துவரின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது. நெட்டிசன்கள்  #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy உள்ளிட்ட ஹாஷ் டேக்குகளை உருவாக்கி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  பிரியங்கா ரெட்டியின் கொடூர மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், உள்ளிட்ட பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கும், அதே சமயம் தார்மீக கோபத்தையும் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில்  'நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.  இத்தகைய விஷயங்களை மீண்டும் மீண்டும் நடக்க அனுமதிக்கிறோம், ஆனால் எதிலும் மாற்றமில்லை. இது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதை வலியுறுத்த,  இவர்களை எல்லாம் ஊர் மத்தியில் வைத்து ஏன் தூக்கிலிடக் கூடாது? பிரதமர் மோடி அவர்களே, பிரியங்கா ரெட்டிக்கு உங்கள் கவனம் தேவை’ என்று பதிவிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai