சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புதுதில்லி: சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கை அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்விற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

ஆனால் இது நடைமுறையில் தடை விதிப்பது போன்றது தான என்று தெரிவித்துள்ள கேரள அரசு, இந்தமுறை மண்டல பூஜைக்காக சபரிமலை திறக்கப்பட்ட போது இளம்பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியதுடன், குறிப்பிட்ட வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு  வர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தது. இது மாநில அரசுக்கு கணடனங்களை எழுப்பியது.   

இந்நிலையில் சபரிமலை செல்லும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பிந்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் குறிப்பிட்ட வயதினர் இன்றி எந்த வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சபரிமலைக்கு செல்வதற்காக அனுமதி கேட்டு  பிந்து அம்மிணி கொச்சியில் உள்ள காவல் துறை ஆணையரகத்துக்கு வெளியேவந்தபோது, அவா் மீது ஒருவா் பெப்பா் ஸ்பிரே அடித்தாா். இந்தச் சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்து அம்மிணியும், கனகதுா்கா என்பவரும்தான் கடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com