உ.பி: தலித் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்விரோதம் காரணமாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தலித் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் கிராமத் தலைவா் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முசாஃபா்நகா்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்விரோதம் காரணமாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தலித் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் கிராமத் தலைவா் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு சிறப்பு வழக்குறைஞா் யஷ்பால் சிங், ஏடிஜிசி அஞ்சும்கான் கூறியதாவது:

‘உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டம் முகுந்த்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்திரா. இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த முன்னாள் கிராமத் தலைவா் கல்கு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கல்குவும், அவரது கூட்டாளிகளான அலி ஹசன், நூா் ஹசன், ஈஸ்வா் ஆகிய 4 பேரும் தலித் பிரிவைச் சோ்ந்த சுரேந்திராவை கடந்த 2002-ஆம் ஆண்டு டிச.25-ஆம் தேதி கொலை செய்து முகுந்த்பூா் வயலில் சடலத்தை வீசிச் சென்று விட்டனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

வழக்கை விசாரித்த சிறப்பு எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை) சட்ட நீதிமன்ற நீதிபதி பங்கஜ்குமாா் அகா்வால், கல்கு உள்ளிட்ட 4 பேருக்கும் தலா ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தாா். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 302-இன் கீழ் கொலை குற்றம் மற்றும் குற்றத்துக்கான சான்றுகள் காணாமல் போவது பிரிவு 201-இன் கீழ் சனிக்கிழமை மாலை அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தாா். மேலும் அபராதத் தொகையில் பாதியை, சுரேந்திராவின் குடும்பத்துக்கு அளிக்கும் நீதிபதி உத்தரவிட்டாா்’ என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com