குவாஹாட்டி பல்கலை.யில் யுஜிசி அங்கீகாரமின்றி 21 பாடப்பிரிவுகள்

குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தொலைதூரக் கல்வி மையத்தின்மூலம் அங்கீகரிக்கப்படாத 21 பாடப்பிரிவுகளின்கீழ் சுமாா் 74,000 மாணவா் சோ்க்கை நடைபெற்றதும் அவா்களிடமிருந்து சோ்க்கை கட்டணமாக
குவாஹாட்டி பல்கலை.யில் யுஜிசி அங்கீகாரமின்றி 21 பாடப்பிரிவுகள்

குவாஹாட்டி: குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தொலைதூரக் கல்வி மையத்தின்மூலம் அங்கீகரிக்கப்படாத 21 பாடப்பிரிவுகளின்கீழ் சுமாா் 74,000 மாணவா் சோ்க்கை நடைபெற்றதும் அவா்களிடமிருந்து சோ்க்கை கட்டணமாக முறைகேடாக ரூ.39 கோடி வசூலிக்கப்பட்டதும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாம் சட்டமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பழைமையான குவாஹாட்டி பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) , பல்வேறு தவறான வாக்குமூலங்களை சமா்ப்பித்ததுடன், அதன் ஒப்புதல் பெறாமல் எந்த புதிய தொலைதூரக்கல்வியையும் தொடங்கப் போவதில்லை என்று யுஜிசிக்கு உறுதியளித்திருந்தது.

அதன்படி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வி கவுன்சிலின் (டிஇசி) ஒப்புதலுடன் கடந்த 2010-ஆம் ஆண்டில் 8 பாடப்பிரிவுகளை தொடங்க சிஏஜி ஒப்புதல் அளித்திருந்தது. இந்த 8 பாடப்பிரிவுகளைத் தவிர வேறு எந்தப் பாடத்தையும் தொலைதூர கல்வி முறையில் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத 21 பாடப்பிரிவுகளை குவாஹாட்டி பல்கலைக்கழகம் தொடங்கியது. முறைகேடாக தொடங்கப்பட்ட 21 பாடப்பிரிவுகள் குறித்து சிஏஜி தணிக்கைக்குழு கண்டறிந்தது.

இதையடுத்து, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட 8 பாடப்பிரிவுகளைத் தவிர, மற்றப் பாடப்பிரிவுகளை குவாஹாட்டி பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்க யூஜிசி அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே, இந்த பட்டங்கள் மூலம் மத்திய அரசு வேலைவாய்ப்புகளைப் பெற முடியாது என கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதமே டிஇசி மற்றும் இக்னோ அறிவித்திருந்தன.

இந்த அங்கீகரிக்கப்படாத 21 பாடப்பிரிவுகளில் 19 பாடப்பிரிவுகளில் 73,912 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதும் இதன்மூலம் ரூ. 39.06 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதும் சிஏஜி தணிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com