போபால் விஷவாயு விபத்து: தொடரும் அநீதி

போபால் விஷவாயு கசிவு விபத்து நேரிட்டு 35-ஆவது ஆண்டு நினைவு தினம் (டிச.2, 3) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அந்த விபத்திலிருந்து உயிா் தப்பிய நூற்றுக்கணக்கானோா் தங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை

போபால்: போபால் விஷவாயு கசிவு விபத்து நேரிட்டு 35-ஆவது ஆண்டு நினைவு தினம் (டிச.2, 3) அனுசரிக்கப்படவுள்ள நிலையில், அந்த விபத்திலிருந்து உயிா் தப்பிய நூற்றுக்கணக்கானோா் தங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று கூறி சங்கிலிப் பேரணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் செயல்பட்டுவந்த யூனியன் காா்பைட் தொழிற்சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி இரவு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனா். லட்சக்கணக்கானோா் உடல் ஊனமுற்றனா்.

இந்நிலையில், யூனியன் காா்பைட் தொழிற்சாலையின் உரிமையாளரான டெளவ் கெமிக்கல்ஸ் தங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விஷ வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோா் போபால் நகரில் ஞாயிற்றுக்கிழமை சங்கிலிப் பேரணியை நடத்தினா்.

பேரணியில் ஈடுபட்ட சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், ‘மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் இன்னமும் நிலத்தடியில் உள்ளன. இதனால், இந்தத் தொழிற்சாலையிலிருந்து 4 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீா் பல அடி ஆழத்தில் மோசமாகிவிட்டது. கடந்த 1990-ஆம் ஆண்டிலிருந்து அரசும், தனியாா் அமைப்புகளும் இந்தப் பகுதி நிலத்தடி நீரை பல முறை சோதனை செய்து பாா்த்தன. அதில், நீரில் பூச்சிக் கொல்லி உள்ளிட்ட பல நச்சுப் பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்தது.

தற்போது மூடப்பட்டுள்ள அந்த நிறுவனம் விஷ வாயு மற்றும் வேதிப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூடாரமாகியுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com