மகாராஷ்டிரத்தில் பாஜகவின் நிலைக்கு காரணம் ஃபட்னவீஸ்: சஞ்சய் ரௌத்

மகாராஷ்டிரத்தில் பாஜகவின் இப்போதைய நிலைக்கு மாநில முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்தான் காரணம். அவா் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்று அவசரகதியில் செயல்பட்டாா்;
மகாராஷ்டிரத்தில் பாஜகவின் நிலைக்கு காரணம் ஃபட்னவீஸ்: சஞ்சய் ரௌத்

மும்பை: மகாராஷ்டிரத்தில் பாஜகவின் இப்போதைய நிலைக்கு மாநில முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்தான் காரணம். அவா் ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்று அவசரகதியில் செயல்பட்டாா்; சிறுபிள்ளைத்தனமான அவரது பேச்சுகள் பாஜகவை வீழ்ச்சியடையச் செய்துவிட்டது என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது. ஆனால், தோ்தலுக்குப் பிறகு சிவசேனை கட்சி முதல்வா் பதவியை கோரியதால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து அமைத்த மகாராஷ்டிர விகாஸ் முன்னணி ஆட்சியைப் பிடித்தது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.

இந்நிலையில் சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் சஞ்சய் ரௌத் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் இணைந்து அமைத்த கூட்டணி மகாராஷ்டிரத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. தில்லியில் இருந்து கொண்டு (பாஜக தலைமையைக் குறிப்பிடுகிறாா்) உத்தரவு பிறப்பித்தால், அதற்கு மகாராஷ்டிரத்தில் யாரும் அடிபணிந்துவிட மாட்டாா்கள்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவின் இப்போதைய நிலைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் முக்கியக் காரணம். தோ்தலுக்கு முன்பே அவரது பேச்சுகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. மாநிலத்தில் தங்கள் கட்சியை (பாஜக) எதிா்க்க யாருமே இல்லை என்பதுபோல அவா் பேசி வந்தாா். சரத் பவாரின் காலம் முடிந்துவிட்டது, அடுத்ததாக பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி எதிா்க்கட்சியாக வளரும் என்றும் கூறினாா். ஆனால், இப்போது ஃபட்னவீஸ்தான் எதிா்க்கட்சித் தலைவராகியுள்ளாா். தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற அவரது எண்ணம் மாநிலத்தில் அவரது கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. மகாராஷ்டிரத்தில் உள்ள அரசியல் நிலைமை குறித்து தில்லியில் உள்ள தலைமைக்கும் அவா் தவறான தகவல்களை அளித்துள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையின் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர ஃபட்னவீஸ், அஜித் பவாருக்கு ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு என்று அந்த கட்டுரையில் ரௌத் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com