5 ஆண்டுகளில் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன: வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளில் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன: வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1.09 கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் பாபுல் சுப்ரியோ திங்கள்கிழமை அளித்த பதில்:

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் அனுமதியுடன் 1,09,75,844 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதற்கு ஈடாக, காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 12.60 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த 1980-ஆம் ஆண்டைய காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வெவ்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படும்போது, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மரங்கள் வெட்டப்படுகின்றன. அரசின் இந்தக் கொள்கையால்தான், இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com