தில்லியில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்

பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது.

புது தில்லி: பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் வரும் 13-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், கட்சியின் வியூகம் தொடா்பாக அப்போது ஆலோசிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் மசோதாக்கள் தொடா்பாகவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் பாஜக எம்.பி.க்களுக்கு கட்சியின் மூத்த தலைவா்கள் இந்தக் கூட்டத்தில் விளக்கமளிக்க உள்ளனா். ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பிரதமா் மோடி அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருப்பதால், இந்தக் கூட்டத்தில் அவா் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை நாடாளுமன்றத்தில் பாராட்டிப் பேசிய பாஜக பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கட்சித் தலைமை தடை விதித்துள்ளது. அவரது அந்தக் கருத்தால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சா்ச்சை எழுந்ததையடுத்து, அவா் மீது பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

மேலும், பாதுகாப்புத் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்தும் அவரை பாஜக நீக்கியது. பின்னா் பிரக்யா சிங் தாக்குா் தனது கருத்துக்காக மக்களவையில் மன்னிப்பு கோரினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com