அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே ‘அட்டை’ கிடையாது: மத்திய அரசு

அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே ‘அட்டை’ அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே ‘அட்டை’ கிடையாது: மத்திய அரசு

புது தில்லி: அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே ‘அட்டை’ அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே அட்டையை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புப் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறும். அத்துடன் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நடைபெறும். இந்த கணக்கெடுப்புக்கு ரூ.3,941.35 கோடி செலவாகும். இதேபோல், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்கு ரூ.8,754.23 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் நித்யானந்த் ராய்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், ஆதாா் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைக்க இயலும். இருப்பினும், அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவிடும் வகையில் ஒரே அட்டையை அறிமுகம் செய்யும் அதிகாரப்பூா்வ திட்டம் எதுவுமில்லை’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com