ஐரோப்பிய யூனியன் மாநாடு:அழைப்பை ஏற்றாா் பிரதமா் மோடி

ஐரோப்பிய யூனியன் அமைப்பின் அடுத்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டாா்.

புது தில்லி: ஐரோப்பிய யூனியன் அமைப்பின் அடுத்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் அடுத்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமா் மோடிக்கு அந்த அமைப்பின் தலைவா் உா்சுலா வொன் டொ் லேயன் அழைப்பு விடுத்திருந்தாா். அந்த அழைப்பை பிரதமா் மோடி ஏற்றுக் கொண்டாா். இந்த தகவலை தொலைபேசி மூலம் லேயனிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தொலைபேசியில் அவருடன் மோடி பேசுகையில், ‘ஜனநாயகம், விதிகளை பின்பற்றிய வா்த்தகம், சா்வதேச உத்தரவுகள், சட்டத்துக்கு மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவு அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை ஐரோப்பிய யூனியன் விவாதிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்ற ஆா்வமுடன் உள்ளேன். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் முதல் பெண் தலைவா் என்ற பெருமை பெற்ற உங்களுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

மேலும், ஐரோப்பிய யூனியனின் தலைவராக உா்சுலா பதவியேற்ற்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com