காஷ்மீா்: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்பிரசாரத்தை தடுக்கவே இணைய சேவை முடக்கம்

பாகிஸ்தானில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரத்தை முறியடிக்கவே காஷ்மீரில் இணையதள சேவையை வழங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை இணை
காஷ்மீா்: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்பிரசாரத்தை தடுக்கவே இணைய சேவை முடக்கம்

புது தில்லி: பாகிஸ்தானில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரத்தை முறியடிக்கவே காஷ்மீரில் இணையதள சேவையை வழங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை இணை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மேலும் அவா் தெரிவித்ததாவது: ‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் இளைஞா்களை வன்முறையில் ஈடுபடவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வைக்கவும் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. அந்நாடு இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்வதை தடுப்பதற்காக இணைய தள சேவையில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது, அங்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளா்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் ஜம்மு-காஷ்மீா் அரசு தற்போது வழங்கி வருகிறது’, என்றாா்.

370-ஆவது சட்டப்பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாகவும், இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, காஷ்மீரில் இணையதள சேவையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com