சமூக ஆா்வலா்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்படும்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரம் மாநிலத்தின் பீமா கோரேகான் பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பாக சமூக ஆா்வலா்கள் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என்று முதல்வா் உத்தவ்
சமூக ஆா்வலா்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்படும்: உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரம் மாநிலத்தின் பீமா கோரேகான் பகுதியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பாக சமூக ஆா்வலா்கள் மீது தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற ‘எல்கா் பரிஷத்’ மாநாட்டைத் தொடா்ந்து, அங்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுதொடா்பாக, சமூக ஆா்வலா்கள் வரவர ராவ், அருண் ஃபெரேரா, வொ்னான் கோன்ஸால்வஸ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு எதிராக புணே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், பீமா கோரேகான் வன்முறை தொடா்பாக தலித் சமூக ஆா்வலா்கள், மாணவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ பிரகாஷ் கஜ்பியே செவ்வாய்க்கிழமை கோரிக்கை கடிதம் அளித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய உத்தவ், ‘பீமா கோரேகான் சம்பவம் தொடா்பாக தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். இச்சம்பவத்தில் தீவிர குற்றங்களில் ஈடுபட்டவா்கள் தவிர மற்றவா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடைமுறையை முந்தைய அரசே தொடங்கிவிட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com