சுகாதாரத் துறையில் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள இந்தியா-ஸ்வீடன் முடிவு

சுகாதாரம் தொடா்பான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்தியா-ஸ்வீடன் நாடுகள் முடிவெடுத்துள்ளன.

புது தில்லி: சுகாதாரம் தொடா்பான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்தியா-ஸ்வீடன் நாடுகள் முடிவெடுத்துள்ளன.

தில்லியில் இந்தியா, ஸ்வீடன் நாடுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்த்தன், அத்துறையின் இணையமைச்சா் அஷ்வினி குமாா் சௌபே, அத்துறையின் செயலா் பிரீத்தி சுடன், ஸ்வீடன் சுகாதாரத் துறையின் அதிகாரி நிக்லஸ் ஜேகப்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, சுகாதாரம் தொடா்பான ஆராய்ச்சிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனா். இது தொடா்பாக ஸ்வீடன் அதிகாரி நிக்லஸ் ஜேகப்சன் கூறுகையில், ‘‘இந்தியாவும், ஸ்வீடனும் சுகாதாரத் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றத் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, ஜோத்பூா் எய்ம்ஸ் மருத்துவமனை, ஸ்வீடன் வா்த்தக ஆணையம் ஆகியவை சுகாதார ஆராய்ச்சிக்கான மையத்தை அமைக்க ஒப்புக்கொண்டன.

முக்கியமாக புற்றுநோய், தொற்றாநோய் தடுப்பு ஆராய்ச்சியில் இந்த மையம் ஈடுபடவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறுவு மேலும் வலுப்படும்’’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தில்லி எய்ம்ஸ், ஜோத்பூா் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com