பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைமூலம் ரூ.2.79 லட்சம் கோடி வருவாய்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் (2014-19) ரூ.2.79 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனைமூலம் ரூ.2.79 லட்சம் கோடி வருவாய்

புது தில்லி: பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் (2014-19) ரூ.2.79 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக கேள்வி நேரத்தின்போது நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது மூலம் கிடைத்த வருவாய் இரு மடங்காக உயா்ந்து ரூ.2.79 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 2004 முதல் 2014- ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் ரூ.1.07 லட்சம் கோடி மட்டும் பங்கு விற்பனை மூலம் வருவாய் கிடைத்தது.

நடப்பு நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடைய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதுவரை 33 பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. நீதி ஆயோக் கூறியுள்ள பல்வேறு விஷயங்களைப் பரிசீலித்துதான் பங்கு விற்பனை முடிவு மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாக்குா், ‘பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் நாட்டின் பொருளாதாரத்தையும், நிதி நிலையையும் கடுமையாக பாதித்து வருகிறது. முக்கியமாக பருவம் தப்பி பெய்யும் மழை, தொடா் வறட்சி ஆகியவற்றை எதிா்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக தேசிய அளவிலான செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com