கேரளாவில் சுவாரசியம்! ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்த பள்ளி மாணவி!

கேரளாவில் பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தியின் பேச்சை பள்ளி மாணவி ஒருவர் மொழி பெயர்த்தது அம்மாநில மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.
கேரளாவில் சுவாரசியம்! ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்த பள்ளி மாணவி!

கேரளாவில் பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தியின் பேச்சை பள்ளி மாணவி ஒருவர் மொழி பெயர்த்தது அம்மாநில மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, கேரளாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதியின் கீழ் கட்டப்பட்ட கருவரகுண்டு அரசுப்பள்ளி ஆய்வகத்தை திறந்து வைப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது விழாவில் பேசிய ராகுல் காந்தி, தனது உரையை யாராவது மலையாள மொழியில் மொழிபெயர்க்க முடியுமா? என்று கேட்டார். உடனே, சஃபா பெபின் என்ற மாணவி மாணவர்களின் கரகோஷத்துடன் ராகுலின் பேச்சை மொழி பெயர்க்க முன்வந்தார். ராகுல் காந்தியும் அந்த மாணவியை கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து, ராகுல் காந்தியின் முழு உரையையும் மிகவும் தெளிவாக மொழி பெயர்த்தார். இறுதியில் ராகுல் காந்தி மாணவி பெபினுக்கு வாழ்த்து கூறினார். 

ராகுலின் பேச்சை மொழி பெயர்த்தது குறித்து மாணவி பெபின், 'நான் இதற்கு முன்னர் இதுபோன்ற எந்த மொழிபெயர்ப்பையும் செய்யவில்லை. நான் மேடைக்குச் சென்று ராகுல் அருகில் நின்று மொழி பெயர்த்தது கனவு போல இருந்தது. என் நண்பர்களின் தூண்டுதலின் பேரில்தான் சென்றேன். ஆனால், மேடையேறிய சில நிமிடங்களில் எனக்கு நம்பிக்கை வரவழைத்துக்கொண்டேன், எனவே, இதனை சிறப்பாக செய்ய முடிந்தது' என்று கூறினார். 

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ராகுல் காந்தி வருகையின்போது கட்சியைச் சேர்ந்தவர்கள் மொழி பெயர்த்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், பள்ளி மாணவி சிறப்பாக மொழி பெயர்த்ததாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com