பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு 

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு 

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து அவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயா்நீதிமன்றம் நியமித்தது. 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை ஒரு ஆண்டுக்கு அவா் அந்தப் பதவியில் நீடிப்பாா் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பணிக்காலம் நவம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான கோப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்கும்படி கடந்த சனிக்கிழமை பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. அதற்கு பொன் மாணிக்கவேல், ‘எனது பதவி தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்சநீதிமன்றம் அது தொடா்பாக உத்தரவிடும் வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது. 

எனவே, தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது அல்ல’ என்று அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதனிடையே, இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி பொன். மாணிக்கவேல் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com