'போலீஸாரின் தைரியமான செயல் பாராட்டத்தக்கது; நீதி நிலைநாட்டப்பட்டது' - பாபா ராம்தேவ்

'போலீஸாரின் தைரியமான செயல் பாராட்டத்தக்கது; நீதி நிலைநாட்டப்பட்டது' - பாபா ராம்தேவ்

போலீஸாரின் தைரியமான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

போலீஸாரின் தைரியமான செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மக்கள் இனிப்பு வழங்கி இதனை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், குற்றவாளிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: போலீஸார் மிகவும் தைரியமான செயலைச் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதுதொடர்பாக காவல்துறைக்கு எதிராக எழும் சட்ட கேள்விகள் இருக்கட்டும், தற்போது மக்கள் நிம்மதி அடைத்துள்ளனர்' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com