உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் விமர்சனம்

உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை விமர்சித்தார்.
உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் விமர்சனம்

உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை விமர்சித்தார். கேரளத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில் 3 நாள் சுற்றுப் பயணத்தை ராகுல் காந்தி வியாழக்கிழமை தொடங்கினாா்.

இந்நிலையில், வயநாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினருடனான கலந்துரையாடலின் போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக விமர்சித்தார். அதில் அவர் பேசியதாவது,

உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெண்களை ஏன் பாதுகாக்க முடியவில்லை என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன. உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒன்றில் அம்மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ-க்கு தொடர்பு இருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், உன்னாவ் அப்பாவி மகளின் சோகமான மற்றும் மனம் துடிக்கச் செய்யும் மரணம், மனிதகுலத்தின் அவமானமாகும். இச்சம்பவம் எனக்கு கோபத்தையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதி மற்றும் பாதுகாப்புக்காக காத்திருந்த மேலும் ஒரு மகள் தனது உயிரை இழந்தாள். இந்த வருத்தத்துக்குரிய நேரத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com