பாஜகவின் டார்ஜிலிங் மாவட்டத் தலைவர் அவிஜித் ராய் சாலை விபத்தில் பலியானார்.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்ட பாஜக தலைவர் அவிஜித் ராய். நேற்று இவர் கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊரான சிலிகுரிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது இவர் வந்த கார் விபத்தில் சிக்கியதில் அவிஜித் ராய் சம்பவ இடத்திலேயே பலியானார். மறைந்த அவிஜித் ராய் நேற்றுதான் டார்ஜிலிங் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.