Enable Javscript for better performance
வரதட்சிணை கொடுமை:தீவைக்கப்பட்ட இளம்பெண் பலி; இருவா் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வரதட்சிணை கொடுமை:தீவைக்கப்பட்ட இளம்பெண் பலி; இருவா் கைது

    By DIN  |   Published On : 09th December 2019 01:54 AM  |   Last Updated : 09th December 2019 01:54 AM  |  அ+அ அ-  |  

    அகா்தலா: வரதட்சிணை தர முடியாத காரணத்தால் தீவைக்கப்பட்ட 17 வயது இளம்பெண் உயிரிழந்தாா். தீவைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

    இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

    தெற்கு திரிபுரா மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், அஜய் ருத்ர பால் (21) என்ற இளைஞரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டாா்.

    அஜய் ருத்ர பாலுடன் வசித்து வந்ததை அறிந்துகொண்ட பெண் வீட்டாா் திருமணத்தை முறைப்படி நடத்தலாம் என்று கோரினாா். இதையடுத்து அஜய் ருத்ர பாலின் தாயாா் மினாதி, பெண் வீட்டாரிடம் ரூ.50,000 வரதட்சிணை கேட்டுள்ளாா். தங்களால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது என்று கூறி பெண் வீட்டாா் ரூ.15,000 கொடுத்தனா். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில், அந்த இளம்பெண் மீது அஜய் மற்றும் அவரது தாயாா் தீ வைத்தனா். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

    பெண் வீட்டாா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜயும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

    இதனிடையே, திரிபுரா பாஜக மகளிரணித் தலைவா் பபிதா தத்தா கூறுகையில், ‘குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மாநில அரசு கண்டிக்கிறது’ என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp