அஜித் பவார் - தேவேந்திர ஃபட்னவீஸ் சந்திப்பு: மகாராஷ்டிர வானிலை குறித்து ஆலோசனை!

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும் இன்று முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் உத்தவ் தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும் இன்று முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர்.

மகாராஷ்டிரத்தில் சுயேச்சை எம்எல்ஏ சஞ்சய் ஷிண்டே மகளின் திருமண விழா சோலாபூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் பதவிக்கு முக்கிய வேட்பாளராகக் கருதப்படும் அஜித் பவார் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அஜித் பவார் ஆதரவில், ஃபட்னவீஸ் தலைமையிலான 80 மணி நேர ஆட்சி கவிழ்ந்த பிறகு, இருவரும் சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறையாகும்.

இந்தச் சந்திப்பு குறித்து அஜித் பவார் இன்று தெரிவிக்கையில், "நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்தோம் என்பதற்காக புதிதாக திட்டம் வகுக்கப்படுகிறது என்று அர்த்தமல்ல. நாங்கள் வானிலை மற்றும் மழை குறித்து பேசினோம். திருமண விழாவில் இருக்கைகள் அப்படி அமைக்கப்பட்டிருந்ததால் இருவரும் அடுத்தடுத்து அமர்ந்தோம்.

அரசியலில் நிரந்தர எதிரிகள் என்றும் யாரும் கிடையாது. இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்ததால், நாங்கள் வானிலை குறித்து பேசுவது மிகவும் இயல்பான ஒன்று" என்றார்.

முன்னதாக, மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் தருணத்தில், திடீரென்று ஒரே இரவில் அஜித் பவார் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளிக்க நவம்பர் 23-ஆம் தேதி பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், இந்த ஆட்சி 80 மணி நேரம் மட்டுமே நீடித்தது. இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com