குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்: டி.கே.சிவகுமார்

குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று கர்நாடக இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்: டி.கே.சிவகுமார்

குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று கர்நாடக இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 67.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், பாஜக 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

15 தொகுதிகளின் வாக்காளர்களின் முடிவுக்கு நாங்கள் உடன்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொள்கிறது. குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டதால், இந்த தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி சோர்வடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com