சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் ஏழை சிறுபான்மையினருக்கென தனியாக இடஒதுக்கீடு எதுவும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ்
சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு இல்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் ஏழை சிறுபான்மையினருக்கென தனியாக இடஒதுக்கீடு எதுவும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

இது தொடா்பாக, மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் பதிலளித்ததாவது:

சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கென எந்தச் சட்டமும் இல்லை. அதே வேளையில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினா்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பாா்சிகள், சமணா்கள், பௌத்தா்கள் ஆகியோரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினரில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்குத் தனியாகவும் மேல்நிலைக் கல்வி, உயா்கல்வி பயில்வோருக்குத் தனியாகவும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பட்ட மேற்படிப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவா்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 3.20 கோடி சிறுபான்மையின மாணவா்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு ரூ.8,916 கோடி ஒதுக்கப்பட்டது. உதவித்தொகை பெற்றவா்களில் 60 சதவீதம் போ் பெண்கள் ஆவா்.

கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மௌலானா ஆசாத் கல்வித் திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை சிறுபான்மையினரைக் கல்வி ரீதியில் முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com